ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | குலதெய்வ கோயிலில் சிறப்பு பூஜை நடத்திய ஓபிஎஸ்!
ops visit kulatheiva kovil
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அமமுக கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதே சமயத்தில் அதிமுக வேட்பாளர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இதில், பாஜகவின் நிலை என்ன என்று தெரியவில்லை.
மேலும் ஒரு திருப்பமாக இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை களமிறக்க உள்ளார். அதற்கான பணிகளையும் அவர் தரப்பு செய்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து பின் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அவரின் குல தெய்வம் கோயிலான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை செய்து ஓபிஎஸ் வழிபாடு நடத்தியுள்ளார்.
English Summary
ops visit kulatheiva kovil