#BREAKING | தேர்தல் ஆணையத்தில் அதிமுக கட்சி இவர் பெயரில் தான் உள்ளதா? பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் சார்பாக கலந்து கொண்ட கோவை செல்வராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

"இந்த கூட்டம் சிறப்பான ஒரு கூட்டமாக அமைந்தது. நான் இன்று அதிமுகவின் சார்பாக கலந்து கொண்டது போல், எல்லா இடங்களிலும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சார்பாக நடக்கும். 

ஒரே கையொப்பம் ஓபிஎஸ் தான். வேறு யாரும் கிடையாது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் 1.12.2021 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் மட்டும் தான் கட்சியின் தலைமையாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

இடைப்பட்ட இந்த காலத்தில் நடந்த கூத்துக்கள் எல்லாம் தேர்தல் ஆணையத்தில் பதிவாகவில்லை. கட்சியின் தலைவர் அண்ணன் ஓபிஎஸ் மட்டும் தான்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, கடிதம் வாங்கி அனுப்பி இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் வரவில்லை. தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் பெயரில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது.

வேண்டும் என்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேள்வி எழுப்பி பாருங்கள்" என்று கோவை செல்வராஜ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS vs EPS AIADMK One head issue RTI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->