எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகியை பதறவைத்த ஓபிஎஸ்! அவசரத்தில் அரங்கேறிய அலங்கோலம்! - Seithipunal
Seithipunal


ஈரோட்டை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர், தன்னை கேட்காமலேயே ஓபிஎஸ் தலைமையிலான அணியின் நிர்வாகியாக ஓபிஎஸ் அறிவித்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியியானது.

இந்த பட்டியலில், அதிமுகவின் (எடப்பாடி பழனிச்சாமி தரப்பின்) அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக உள்ள ஜெயராமனை, வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அதிமுக நிர்வாகி ஜெயராமன், "நான் தற்போதுவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தான் இருக்கிறேன். என்னை கேட்காமலேயே ஓ பன்னீர்செல்வம் அவரின் அணியின் நிர்வாகியாக அறிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப இட்டுள்ளேன்" என்று ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Wrong Announce ADMK EPS Side


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->