நமது மௌனம் ரொம்ப ஆபத்தானது.... சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள் சிதைத்து விடுவார்கள்...!!! - ஜெகதீப் தன்கர்
Our silence is very dangerous Those who have mind to think destroy it Jagdeep Dhankar
ஜனாதிபதிக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்து உத்தரவிட்டது. அதாவது, தமிழக அரசு சார்பில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில், மசோதா மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.இந்த சூழலில் ,டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துக் கொண்டு உரையாடினார்.
ஜெகதீப் தன்கர்:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது.அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை.
இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இரு விதமான கருத்துகளை தெரிவிக்கிறது.
நமது மவுனம் ரொம்ப ஆபத்தானது. சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பல விமர்சனங்கள் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
English Summary
Our silence is very dangerous Those who have mind to think destroy it Jagdeep Dhankar