ப.சிதம்பரத்தை விசாரிக்க கூடாது!....டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
P chidambaram should not be investigated delhi special court action order
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஏர்செல் நிறுவனத்தில், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும், இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் வக்கீல், மனுதாரர் முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால், முன் அனுமதி பெற வேண்டும் என்றும், மாறாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அனுமதி இல்லாமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனுக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் முறைகேட்டில் அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
English Summary
P chidambaram should not be investigated delhi special court action order