85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க படிவம்... விநியோக தேதி?
parliament election application distribution
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது,
அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிறகு 176 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
எனவே மொத்த சாவடிகளாக 68,320 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்களின் விலை வித்தியாசப்படுவதால் தேர்தல் செலவு பணத்துக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை பட்டியல் மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 1,91,491 அரசு அலுவலகங்களில் முன் வரையறுக்கப்பட்டு இருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
வருகின்ற 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 டி வழங்கப்பட உள்ளது.
அதில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம். சிவிஜிஎல் செயலி மூலம் இதுவரை மொத்தம் 252 புகார்கள் பெறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி வாரியாக நாளை முதல் வாக்கு இயந்திரங்கள் பிரிக்கப்படும். இந்த தேர்தலில் அதிக அளவில் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
parliament election application distribution