தனது கட்சிக்கு வார்டு பொறுப்பாளர்களை வலை வீசி தேடும் கமல்ஹாசன்! அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத் தொகுதிக்கு வார்டு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் 07-07-2023 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தென்சென்னை, கோவை, மதுரை ஆகிய பாராளுமன்றத் தொகுதிக்கு வார்டுவாரியாக பொறுப்பாளர்கள் நியமிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றினோம். 

அதன் தொடர்ச்சியாக, ஏராளமான நிர்வாகிகள் இப்பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். வார்டு பொறுப்பாளர்களாக செயல்பட விரும்பும் நிர்வாகிகள் தங்களது விவரங்களை கீழ்க்கண்ட லிங்கில் உள்ள விண்ணப்பத்தில்(Google Form) பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தலைவரின் மேற்பார்வையில் பரிசீலனை செய்யப்பட்டு வார்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். நன்றி. நாளை நமதே!

குறிப்பு: வார்டு பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்(பொறுப்பு), மாவட்ட அமைப்பாளர்கள், மண்டல செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாநில செயலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Google Form Link : https://forms.gle/8qGcuXGX9NwtqWEi6


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament Election Duty MNM announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->