வசமாக சிக்கிய ராகுல்காந்தி! டெல்லி போலீசார் சிறப்பு குழு அமைத்து விசாரணை செய்ய முடிவு!
Parliament Incident BJP MP Congress RahulGandhi
பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் விவகாரத்தை முன்னிட்டு, பா.ஜ.க. எம்.பி.க்களும், இண்டி கூட்டணி எம்.பி.க்களும் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 பா.ஜ.க. எம்.பி.க்கள் கீழே விழுந்து காயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார்கள்.
தங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக பா.ஜ.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதன் அடிப்படையில், பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட, ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தற்போது குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு ஏற்பட்ட பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், காயம் அடைந்த பாஜக எம்.பி.க்களிடம் வாக்குமூலம் பெற குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, ராகுல் காந்தியை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இத்துடன், ராகுலை விசாரிக்க டெல்லி போலீசார் சிறப்பு குழு ஒன்றை அமைத்து, பாராளுமன்ற சபாநாயகரிடம் அனுமதி பெற கடிதம் அனுப்பியுள்ளனர்.
சபாநாயகர் அனுமதி அளித்ததும், ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வர அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்டரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Parliament Incident BJP MP Congress RahulGandhi