உதயநிதி பிப்-13ல் நேரில் ஆஜராக பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன்.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொசு, டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என பேசியது இந்திய அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இந்துக்களின் நம்பிக்கையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புண்படுத்திவிட்டதாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையஙகளில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ஒரு சில மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அம்மாநில போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

உதயநிதி அமைச்சராக பதவி வகிப்பதால் இந்த வழக்கு பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதான இந்த வழக்கு வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Patna spl court sent summon to udhayanithi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->