அமைச்சர் துரைமுருகனுக்கே இந்த நிலையா? வேலூர் மக்கள் செய்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொது தேர்தலில் வேடுர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 9,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில் இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது கடினம் என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கதிர் ஆனந்த் எதுவும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் இந்த சூழலில் அவர் மீண்டும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். 

இதற்கிடையே வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கனியாபுரம் பகுதியில் நேற்று முன்தின மாலை அமைச்சர் துறைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்திற்காக வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். 

அப்போது அமைச்சர் உட்பட திமுகவினர் வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சாலை மறித்து ஊருக்குள்ளே வராத என கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்த போது காவல்துறையினருக்கு எதிராகவும் கிராம மக்கள் கோஷம் எழுப்பினர். 

திமுகவினர் அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் பலன் அளிக்காததால் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடன் வந்த திமுகவினர் அனைவரும் திரும்பி சென்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த இருந்து வரும் நிலையில் சாலை வசதி கூட சரியாக இல்லை என குற்றம் சாட்டியுள்ள கிராம மக்கள் எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த நந்தகுமார் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People protest and send back DuraiMurugan from campaign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->