சீமான் மீது சிவில் வழக்கு தொடர உள்ளேன்.!! தண்டனை வாங்கி கொடுத்தே தீருவேன் - டி.ஐ.ஜி வருண்குமார்.!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தின் முன்னாள் எஸ்.பி.யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார், நாம் தமிழர் கட்சியினர் தனது குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் அவதூராக பேசுவதாக கூறி சீமான் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். 

இது குறித்து அவர் அளித்த மனுவில், “சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

ஆகவே, சீமான் தனக்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வருண்குமார், “சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்க தொழிலதிபர் மூலம் தூது விட்டார். ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

பொது வெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால், நீதிமன்றத்தில் அதை தெரிவிக்கப்படும். இனிமேல் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். 

அவர் மீது, சிவில் வழக்கு ஒன்றும் தொடர உள்ளேன். சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dig varunkumar case file aginst seeman


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->