தமிழ்நாடு மக்கள் 2026லும் அதிமுக வை 'get out' சொல்லப்போவது உறுதி...! - ஆர்.எஸ் பாரதி
people TN certain get out AIADMK 2026 too RS Bharathi
தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது,"சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் 'பச்சைப் பொய்' பழனிசாமி சொன்ன பொய் குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்தார்.பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி! அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி!

என அடிமை அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதல்-அமைச்சர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாட கிளம்பியிருக்கிறார்.கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா?
பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்ன போதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பாஜக கூட்டனிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி!தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களுக்கு அளிக்கப் போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துக்களை செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி! தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் காலடியில் வீழ்ந்துக் கிடந்து அடிமை அரசியல் செய்து வரும் பழனிசாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி!தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜகவிற்கும், அதன் அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் 'Getout' சொல்லப்போவது உறுதி! இப்போது இருக்கிற 66 அதிமுக எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கையில் 2026-ல் 6 கூட கிடைக்காது.
'அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது' என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது? இடி அமின் ஆட்சியை நடத்திவிட்டு இம்சை அரசன் போல உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
தமிழ்நாட்டு வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகதான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது"எனத் தெரிவித்துள்ளார் .இது தற்போது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
people TN certain get out AIADMK 2026 too RS Bharathi