அனைவருக்கும் நன்றி..! விரைவில் நேரில் சந்திப்போம்; பத்ம பூஷன் அஜித்குமார்..!
Thank you all We will meet in person soon Padma Bhushan Ajith Kumar
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது, கார் ரேஸிலும் கலந்து கொண்டு வெற்றிபெற்று வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முா்மு அவர்களிடம் இருந்து 2024 ஆம் ஆண்டுக்கான பூத்ம பூஷன் விருதை அஜித் குமார் பெற்றுக்கொண்டார்.
அஜித் விருதுபெற்ற புகைப்படங்கள் மாறும் விடீயோக்களை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.அத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு உள்ளிட்டோரும் பத்ம ஸ்ரீ விருதை பெற்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அஜித்குமாருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அஜித், 'ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். விரைவில் நேரில் சந்திப்போம்' என்று கூறியுள்ளார்.
English Summary
Thank you all We will meet in person soon Padma Bhushan Ajith Kumar