முஸ்லிமா..? என்று கேட்டுத்தான் சுட்டார்கள்! அரசியல் செய்யாதீங்க! காங்கிரசுக்கு கணவனை இழந்த பெண் பதிலடி!
Kashmir Terrorist Attack congress controversy speech
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் மத அடிப்படையிலான வன்முறை நடந்ததா என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார் சமீபத்தில் எழுப்பிய சந்தேகம் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
“பயங்கரவாதிகள் மதத்தை அடையாளம் கண்டுகொண்டு தாக்கினார்களா? அவர்களிடம் நேரில் சென்று கேட்கும் அவகாசம் யாருக்குள்ளாகும்? இது உண்மையா என சந்தேகம் உள்ளதாக சிலர் கூறுகிறார்கள்” என கருத்து தெரிவித்திருந்தார்.
இத்தொடர்பாக, தாக்குதலில் கணவரை இழந்த புனேவைச் சேர்ந்த பிரகதி ஜக்தலே கடும் வலியுடன் பதிலளித்துள்ளார். “தயவுசெய்து இந்தச் சம்பவத்தை அரசியலாக்காதீர்கள். நாங்கள் நேரில் அந்த தாக்குதலை அனுபவித்தோம். பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களையே அடையாளம் கண்டுக்கொண்டு சுட்டுக் கொன்றனர். அவர்கள் சொன்ன வார்த்தைகள் எங்களை இன்னும் காயப்படுத்துகின்றன. பயங்கரவாதிகள் நாங்கள் யார் என்பதை கேட்டு தெரிந்துகொண்ட பிறகே எங்களை தாக்கினர்,” என அவர் கூறினார்.
“நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். கண்களை மூடும்போதெல்லாம் துப்பாக்கியுடன் ஒருவர் நிற்பது போன்ற காட்சி வருகிறது. தூக்கம் போய்விட்டது. எங்கள் வலியை அரசியல் பேச்சுக்காக பயன்படுத்த வேண்டாம்” எனப் பிரகதி உருக்கமாக கேட்டுக் கொண்டார்.
English Summary
Kashmir Terrorist Attack congress controversy speech