கங்கனாவை அறைந்த காவலருக்கு பரிசு அறிவித்த பெரியார் திராவிடர் கழகம்..!
Periyar Dravidar Kazhagam announces Price To CISF Lady Police Who Slapped Kangana
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு எம். பி. யாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். தேர்தல் முடிவுக்குப் பிறகு இவரை சண்டிகர் விமான நிலையத்தில் ஒரு மத்திய தொழிற் பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
நாடு முழுவதும் மிகவும் பூதாகாரமாக மாறியுள்ள இச்சம்பவத்தின் பின்னணியில் பஞ்சாப் விவசாயிகள் பிரச்சனை உள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய இந்த விவசாயிகள் அனைவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா ரனாவத் கூறினார். இதன் காரணமாக சண்டிகர் விமான நிலையத்தில் அந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் கங்கனாவை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட குல்விந்தர், நேற்று எம். பி. யை தாக்கியதாக கூறி கைதும் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து குல்விந்தருக்கு ஏதும் தீங்கு நேர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்று பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், குல்விந்தர் கவுரின் வீட்டுக்கு பெரியார் படம் பொரித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அல்லது தங்கள் நிர்வாகி ஒருவரிடம் நேரில் மோதிரத்துடன் பெரியார் குறித்த புத்தகங்களும் கொடுத்து அனுப்புவோம் என்று அறிக்கை விட்டுள்ளது.
English Summary
Periyar Dravidar Kazhagam announces Price To CISF Lady Police Who Slapped Kangana