கட்டம் கட்டப்படும் PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா).! அமலாக்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.!
PFI Bank Account Issue
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தை முடக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கேரளாவில் கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத அமைப்பு என்று தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழக ஆளுநர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்படவேண்டிய ஒரு இயக்கம் என்பது போன்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 68.52 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் தொடர்புடைய முப்பத்திமூன்று வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.