தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக சென்னையில் குவியும் மாற்றுத்திறனாளிகள்.! - Seithipunal
Seithipunal


திமுக தேர்தல் அறிக்கையில் ரூ.1,000 ஆக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இதுவரை உயர்த்தப்படவில்லை என குற்றச்சாட்டு சாட்டினார். 

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை புதுச்சேரி மாநிலத்தில் 40% ஊனம் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3,800/- தெலுங்கானாவில் ரூ.3,016/- ஆந்திராவில் ரூ.3,000/- என அண்டை மாநிலங்களில் உயர்த்தி வழங்கப்படுகிறது. இம்மாநிலங்களில் தமிழகத்தைவிட கூடுதலான பயனாளிகளுக்கு உதவிதொகை வழங்கப்படுகிறது, தமிழகத்தில் வயது வரம்பு உள்ளிட்ட சட்ட விரோத விதிகள் வைத்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படுகிறது.

தமிழகத்திலும் இதே அளவு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும். முதுகு தண்டுவடம், தசைச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.5,000/- வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் போராடி வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள இந்நேரத்திலும்கூட ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தித்தரப்படும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் உதவித்தொகை பெறும் சுமார் 2 லட்சம் பேருக்கு மட்டும் ரூ.500 சமீபத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது, சமூக நலத்துறை அரசாணை மற்றும் வருவாய்த்துறை மூலம் பட்டுவாடா செய்யப்படும் சுமார் 3.1/2 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதுவும்கூட உயர்த்தாதனால் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளனர்.

மார்ச்-22 கோட்டையில் குடியேறும் போராட்டம் எனவே, மேற்கண்டக் கோரிக்கையை வலியுறுத்தி 10,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேறும் வரை சென்னை கோட்டை தலைமை செயலகத்தில் மார்ச் 22-ம் தேதி முதல் குடியேறும் போராட்டம் நடத்துவது எனவும், கோரிக்கை நிறைவேறும் வரை தீவிரப் போராட்டத்தை நடத்துவது எனவும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த நியாயமான இக்கோரிக்கையை அரசு ஏற்க வலியுறுத்தும் வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் எமது சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது என தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆகையால், மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Physically Challenged protest in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->