குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய் உதவித்தொகை திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அன்றாட செலவுகளுக்கு மாதம்தோறும் 4 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பெற்றோர் வழங்கிய அன்பையும், பராமரிப்பையும் யாராலும் ஈடு செய்து விட முடியாது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இந்தியத் தாய் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப் பட்டது. 

இதில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி  முதல், கடந்த பிப்ரவரி 28ந் தேதி வரை உள்ள குழந்தைகள் மட்டுமே அடங்குவர்.

இந்த திட்டத்தின் கீழ், 

* கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், 
* கல்வி உதவித் தொகை வழங்குதல், 
* 18 முதல் 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் 
* மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் உள்ளிடட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய் அடிப்படை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் வழங்கி தொடங்கிவைத்தார். 

மேலும் பெற்றோரை இழந்த  குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கடன் வாங்க விரும்பினால், அவர்களுக்கு ‘பிம்.எம். கேர்ஸ்’ உதவி செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm care new scheme open today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->