வெற்றிபெற்ற பாஜக வேட்பாளருக்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ந் தேதி முடிகிறது.

இதனையடுத்து, அடுத்த துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க. வேட்பாளர், முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பெற்றுள்ளார்.

நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துகளை ஜகதீப் தன்கருக்கு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்செ செய்தியில், "இந்தியக் குடியரசின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜகதீப் தன்கருக்கு எனது வாழ்த்துகள்.

தங்கள் பதவிக்காலத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகள் காக்கப்படுவதுடன், மாநிலங்களவையில் ஜனநாயக விவாதங்கள் வலுப்பெறும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi and mk stalin wish to vice president


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->