கோவை கேஸ் லாரி விபத்து - ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.!
case file against driver for gas lorry accident in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி மேம்பாலம் அருகே எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் டேங்கர் பகுதி சேதமடைந்து உள்ளே இருந்த எரிவாயு கசிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொறியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மீது கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
case file against driver for gas lorry accident in coimbatore