மீண்டும் ஒரே நாடு, ஒரே தேர்தல்.. பிரதமர் மோடி அதிரடி.!!
pm modi calls for one nation one election
இந்தியாவில் தேர்தல் ஆணையம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள் 2011ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநில பாஜக தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருந்தார். பின்னர் இது நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களும் கலந்து கொள்ளும் விதத்தில் விரிவுபடுத்தப்பட்டது.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது, 1950 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்தி, அதன் கண்ணியத்தை தேர்தல் ஆணையம் அதிகரித்து வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு, அதிகாரிகளை இடமாற்றம் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.
1951 - 1952 ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவில் தான் வாக்குப்பதிவு இருந்தது, தற்போது 2019 பாராளுமன்ற தேர்தல் இது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. கல்வியறிவு மற்றும் வளமான பகுதிகளாக கருதப்படுகின்ற நகர்ப்புறங்களில் குறைந்த வாக்கு பதிவு சதவீதம் தான் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் சமூக ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஓட்டுப்போட தான் வருவதில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் 75% வாக்குப்பதிவை பாஜக தொண்டர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்களிப்பது மிகவும் புனிதமான நன்கொடையாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியல் என்பது பற்றி விவாதிப்பதற்கு அழுத்தம் தர வேண்டும். கருத்துகள் வெளியே வரட்டும். அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாட்டின் முன்னேற்றத்தில் தடுக்கிறது.
மக்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடாமல், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
English Summary
pm modi calls for one nation one election