பெரும் வேதனையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி.!   - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் கிராம பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நேற்று நடைபெற்றது. இதில், இந்திய ராணுவப் படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த விமானி வருண் சிங்கை விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்டு வரும் போது வரும் பொழுது அவருக்கு 80 - 85 சதவீத தீக்காயங்கள் இருந்ததாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை மோசமாக இருந்தாலும், அவரின் உடல் பாகங்கள் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து, குரூப் கேப்டன் விமானி வருண் சிங்கை உயர் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று விமானப்படை அறிவித்துள்ளது.

குரூப் கேப்டன் வருண் சிங் வீர மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குரூப் கேப்டன் வருண் சிங் பெருமை, வீரம் மற்றும் மிகுந்த நேர்த்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார். 

அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவை என்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM MODI MOURNING TO VARUN SINGH DEAD


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->