நான் மனிதபிறவி அல்ல, கடவுள் அனுப்பிய தூதுவன் - பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தான் ஒரு மனித பிறவி இல்லை என்றும், என்னை இந்த உலகிற்கு அனுப்பிய போது அனுப்பியது கடவுள்தான் என்று கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. 

ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

"பூரி ஜெகநாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர் தான்" என்று ஒடிசா மாநில பாஜக தலைவர் அண்மையில் பேசியது சர்ச்சை ஆகியது.

அவரின் இந்த பேச்சுக்கு ஒடிசா மாநில ஒவ்வொரு குடி மக்களிடமும் கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, மூன்று நாட்கள் விரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஒடிசாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டியில், "நான் மனிதப் பிறவி கிடையாது. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் தான். நான் உயிரியல் ரீதியாக பிறந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். 

நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண ஒரு மனிதனால் பெற முடியாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று நரேந்திர மோடி பேட்டி அளித்துள்ளார்.

இவரின் இந்த பேட்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவுடன், சர்ச்சைகளையும், விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேட்டி குறித்து காரசாரமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi say i am not human


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->