அய்யயோ! போட்ட டிவிட்டை டெலிட் செய்த மோடி! வரிந்துகட்டி வரும் எதிர்க்கட்சிகள்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சி குறித்து விமர்சித்த ட்வீட்டின் ஒரு பகுதியை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில், மோடி ஐந்து தனித்தனி பதிவுகளை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், இதில் மூன்றாவது ட்வீட்தான் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட அந்த பதிவில், "உண்மையற்ற வாக்குறுதிகளை வழங்குவது எளிது, ஆனால் அதை செயல்படுத்துவது எனபது சிரமமானது/சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி தற்போது உணர்ந்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள், ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியாது என்பதையும், தற்போது மக்கள் முன்னிலையில் அம்பலமாகிவிட்டுள்ளனர். 

காங்கிரஸ் ஆட்சி செய்கின்ற ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் தெலங்கானாவின் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலங்களில் நிதி நிலைமை மோசமடைந்துள்ளது. இதுவே அம்மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சியால் செய்யப்படும் வஞ்சகமாகும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டு உள்ளநிலையில், சம்மந்தப்பட்ட மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை தவறான தகவலுக்காக இதை நீக்கியதாக விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi X Post delete congress


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->