நடிகர் அஜித், இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!
PMK Anbumani wish Padma bhushan AjithKumar
பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்!
இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.
பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு வாழ்த்துகள்!
விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருதை, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விளையாட்டுத்துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.
#PadmaShriAshwin
பத்மஸ்ரீ விருது பெற்ற 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியருக்கு வாழ்த்து!
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் ஆற்றிய பணிகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி, இலக்கியம் மற்றும் இதழியல் துறையில் அவரது சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
English Summary
PMK Anbumani wish Padma bhushan AjithKumar