டாஸ்மாக் கடைகளை திறந்தாள் நானே இழுத்து மூடி, பூட்டு போடுவேன் - எச்சரித்த டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை திறந்தால், அந்த கடைகளை நானே இழுத்து மூடி, பூட்டு போடுவேன் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் இராமதாஸ் தெரிவிக்கையில், "சென்னையில் இன்னும் பல இடங்களில் மழை வெள்ளநீர் வடியவில்லை.

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு படு தோல்வி அடைந்துள்ளது. மழை வந்தாலே மக்கள் அஞ்சி நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாய் வழங்க வேண்டும். 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மொத்தம் 195 டாஸ்மார்க் கடைகள் உள்ளது. இதில், விழுப்புரத்தில் 109 டாஸ்மார்க் கடைகளும், கள்ளக்குறிச்சியில் 86 டாஸ்மார்க் கடைகளும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் புதிதாக 3 டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவிருப்பது கண்டிக்கத்தக்கது. 

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாகக் கூறும் தமிழக அரசு, மாறாக புதிதாக மதுக் கடைகளை திறப்பதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது.

மேலும், வெள்ளிமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக சொல்வதும் தமிழக அரசின் தோல்வியை தான் காட்டுகிறது. 

இதை எல்லாம் மீறி அந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளை தமிழக அரசு திறந்தால், நானே அந்தக் கடைகளுக்கு பூட்டுப் போடுவேன்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Warn to TNGovt DMK MK Stalin TASMAC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->