சென்னையில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணிக்கு பாராட்டு விழா...!
pmk head gk mani 25th year calibration
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே. மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று மறுநாள் பாராட்டு விழா நடந்து வருகிறது.
சென்னை சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகை தொலைக்காட்சி நிலையம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் நாளை மறுநாள் இன்று காலை 10.30 மணிக்கு இந்த பாராட்டு விழா தொடங்கியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். விழாவுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்கிறார்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப் பட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
English Summary
pmk head gk mani 25th year calibration