வருகின்ற 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.!
PMK leader Dr Anbumani Ramadoss Say About 2026 election
சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் இருக்கும், காமராஜரின் திருவுருவர் சிலைக்கு, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு செய்திகளை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,
"சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர் அவர்கள் பெயரை சூட்டி இருக்கிறது. ஆனால் பெயர் பலகையில் அவர் பெயர் இல்லை. உடனடியாக சென்னை விமான நிலையத்தில் காமராஜர் அவர்களின் பெயர், இந்த பலகையில் கொண்டு வர வேண்டும். இல்லையேல் அங்கே பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்கள் நடத்தும். இது குறித்து ஏற்கனவே நானும், மருத்துவர் ஐயாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் காமராஜர் பெயர் வளைவுகள் அமைக்கப்பட்டன. ஆனால், இப்போது ஒரு சில வளைவுகளில் அவர் பெயரை நீக்கி இருக்கின்றார்கள். மீண்டும் கர்மவீரர் காமராஜர் அவர்கள் பெயரை மாநில அரசு அமைக்க வேண்டும். காரணம் அடுத்த தலைமுறைகளுக்கு காமராஜர் அவர்களை பற்றி தெரியப்படுத்த வேண்டும்.
நல்ல நேர்மையான, மக்கள் சார்ந்த ஆட்சி கொடுத்தவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் காமராஜர். இன்று அவருடைய பிறந்தநாள் விழாவை அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இனியும் கொண்டாடுவோம்" என்று, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி இராமதாஸ் அளித்த பதிலில், "2026 ஆம் ஆண்டு பாமக தலைமைகள் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிமுகவின் கட்சி பிரச்சனைகள் தலையிட பாமக விரும்பவில்லை" என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
PMK leader Dr Anbumani Ramadoss Say About 2026 election