பரந்தூர் விமான நிலைய விவகாரம் | பாமக எம்எல்ஏ ஜிகே மணி வைத்த கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று, தமிழக சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ ஜி கே மணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, "தமிழக அரசின் சார்பில் போராட்ட குழுவுடன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. 

அதே சமயத்தில் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், சென்னைக்கு அடுத்து பசுமை விமான நிலையம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அரசு மிக கவனம் செலுத்த வேண்டும்.

விமான நிலையம் அமைக்கும் பணியில் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று பாமக எம்எல்ஏ ஜி கே மணி வலியுறுத்தி பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK MLA GK Mani Assembly Speech parandur Airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->