அடிமைத் தன மனப்பான்மை அதிகமாகியுள்ளது - பிரபல அரசியல் கட்சியை வச்சு செய்த பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


நாட்டின் முந்தைய அரசுகள் நம்பிக்கை சார்ந்த மையங்களை கண்டு கொள்ளவில்லை என்றும், அடிமைத் தன மனப்பான்மை சிலரிடம் அதிகமாகியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் மனா கிராமத்தில் கவுரிகண்ட்-கேதர்நாத் இடையே ரோப்கார் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் பேசுகையில், குறிப்பாக காசி விஸ்வநாத கோயில், உஜ்ஜைன் மற்றும் அயோத்தி கோயில் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட நம்பிக்கை சார்ந்த இடங்களின் பெருமைகள் அனைத்தும், தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

அடிமைத் தன மனப்பான்மை சிலரிடம் அதிகமாகிய காரணத்தினால் தான், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைக் கூட ஏதோ குற்றம் போல அவர்கள் பார்க்கிறார்கள். 

மற்ற நாடுகளில் உள்ள நம்பிக்கை சார்ந்த இடங்கள் குறித்து அவர்கள் சிறப்பாக பேசுவார்கள், நம் சொந்த நாட்டில் உள்ள மக்களின் நம்பிக்கை சார்ந்த இடங்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. 

நம் நாட்டில் பல ஆண்டுகளாக நம்பிக்கை வைத்துள்ள இடங்கள் குறித்தும், கோடிக்கணக்கான மக்களின் கலாசாரம் குறித்தும் முந்தைய அரசுகளுக்கு அக்கறை இல்லை. 

நம் நட்டு மக்களின் கலாசாரம், நம்பிக்கை சார்ந்த இடங்கள் சாதகமானது கிடையாது. அவை நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றைப் போன்றது. நமது கலாசாரம், நம் அடையாளம்" என்று பிரதமர் மோடி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMModi Say About Indian Culture


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->