இளையராஜாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் - என்ன சொன்னார் தெரியுமா?!
PMModi thanks to Ilaiyaraja
பிரதமர் மோடியின் சட்டங்களை நினைத்து அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா பாராட்டியிருந்த நிலையில், தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
புளூகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் வெளியிட்டுள்ள அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார்.
இசைஞானி இளையராஜா எழுதியுள்ள முன்னுரையில், "அம்கேத்கரின் வழி நின்று அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற உன்னததிட்டம் கொண்டு வந்து ஏழை ஏளியவரின் மானம் காக்க அம்பேத்கர் உழைத்ததின் முக்கிய விஷயத்தை பிரதமர் மோடி நனவாக்கியதை நாம் போற்றித்தான் ஆகவேண்டும்.
அம்பேத்கர் கனவுகளையும் அதை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தி வருகிறார். இன்று அம்பேத்கர் உயிருடன் இருந்தால் பிரதமர் மோடியை நினைத்து பெருமை கொள்வார்" என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு விசிக, திமுகவை சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். டிவிட்டரில் இளையராஜாவை கடுமையான வார்த்தையால் திட்டி ஒரு டேக்கையும் ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில், தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary
PMModi thanks to Ilaiyaraja