கவிஞர் கண்ணதாசன் மகன் அண்ணாதுரை பாஜகவில் இணைந்தார்.!! - Seithipunal
Seithipunal


நீதிக் கட்சியிலிருந்து பிரிந்து மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை திமுகவை துவங்கிய போழுது அவருடன் இருந்த கவிஞர் கண்ணதாசன் 1961ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் இணையும் கட்சியில் தவறு நேர்ந்தாலும் அந்த கட்சியில் இருந்து உடனடியாக விலகி விடுவார். எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து தனி கட்சி துவங்கிய போது கண்ணதாசன் எம்ஜிஆரை கடுமையாக விமர்சனம் செய்தார். இருப்பினும் 1978 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் கண்ணதாசனை தமிழ்நாடு அரசின் அரசவை கவிஞராக நியமனம் செய்தார்.

கண்ணதாசனுக்கும் அரசியலுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருந்து வரும் நிலையில் அவருடைய மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அண்ணாதுரை கண்ணதாசன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "என் தந்தை கண்ணதாசன் திமுகவில் இருந்தபோது அதன் தலைவராக இருந்த அண்ணாதுரையின் பெயரை தான் எனக்கு சூட்டினார். தமிழகத்தில் தற்பொழுது இந்து கடவுள்களை இந்துக்களே விமர்சனம் செய்து வருகின்றனர். இது போன்ற நடப்பது என் மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் தமிழ் மொழியின் மீது யாரும் காட்டாத அன்பை பிரதமர் நரேந்திர மோடி செலுத்தி வருகிறார். இதுபோன்ற காரணங்களால் தான் பாஜகவில் இணைந்துள்ளேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poet Kannadasan son Annadurai joined BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->