காவலர்களின் அர்ப்பணிப்பு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது - பிரதமர் மோடி புகழாரம்!
Police dedication ensures people safety praises pm modi
மனிதாபிமான சவால்களின் போது காவலர்களின் முன்முயற்சியும், உதவியும் சமமாக பாராட்டத்தக்கவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில், கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி
ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து உயிர் தியாகம் செய்த இந்திய காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி இன்று நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் காவலர்கள் நாடு முழுவதும் வீர வணக்க நாளை அனுசரித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், இன்று, காவல்துறை நினைவு தினத்தில், நமது காவலர்களின் துணிச்சலுக்கும், தியாகத்திற்கும் மரியாதை செலுத்துகிறோம் என்றும், அவர்களின் தளராத அர்ப்பணிப்பு நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் தைரியத்தையும் உறுதியையும் எடுத்துக்காட்டுகிறார்கள் என்றும், மனிதாபிமான சவால்களின் போது அவர்களின் முன்முயற்சியும் உதவியும் சமமாக பாராட்டத்தக்கவை என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Police dedication ensures people safety praises pm modi