மணிகண்டன் விஷம் அருந்திதான் உயிரிழந்தார் - காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்  செல்லப்பட்டு  கடுமையான காயங்களுடன் வீடு திரும்பிய மணிகண்டன் என்ற மாணவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்  என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது!

காவல்நிலையத்தில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது தான்  மாணவர் மணிகண்டனின் மரணத்திற்கு காரணம் என்றும், இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் புலிவேர் தரப்பிரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மணிகண்டன் விஷம் அருந்தி இறந்து உள்ளார் என்று, காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி அளித்துள்ளார்.

அவரின் அந்த பேட்டியில், "காவல் துறை தாக்கியதில் அவர் இறக்கவில்லை என உறுதியாகிறது. மணிகண்டன் விஷம் அருந்தி இறந்து உள்ளார். அவர் எதனால் விஷம் அருந்தினார் என விசாரணை நடைபெற்று வருகிறது.

மணிகண்டன் மரணம் குறித்து இனி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பகிர கூடாது" என்று காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் பேட்டி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

POLICE SAY MANIKANDAN DEAD SUICIDE


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->