பீகாரில் அரசியல் மாற்றம்; நிதிஷ்குமாருடன் லாலு பிரசாத் கூட்டணி..? - Seithipunal
Seithipunal


பீகாரில்  நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி  நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு பாஜக ஆதரவு கொடுத்துள்ள நிலையிலேயே  இவ்வாறு  கேள்வி எழுந்துள்ளது.

பீகாரில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்து பீகாரின் முதல்வர் வேட்பாளர் பற்றிய ஆலோசனை நடைபெறும் என்று சமீபத்தில் அமித்ஷா குறிப்பிட்டிருந்தார். 

இதனால், முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் நீடிக்க முடியாது என்ற செய்தி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பீகாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், பாஜக கூட்டணியும் தொடரும் என்று கூறப்பட்ட நிலையில், திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி அமைந்தால், முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் பெயரிடப்படுவார் என்று கூறப்படுகிறது. 

இதனால், பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, லாலுவுடன் நிதீஷ் குமார் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும்  கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Political change in Bihar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->