சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு.!!
Polling completed in Chhattisgarh and Mizoram
நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி சத்தீஸ்கரில் இன்று முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. சத்தீஸ்கரின் கேன்கர், கோன்டா, பிஜபூர், தண்டேவாடா, நாராயண்பூர் ஆகிய 10 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், பிற தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
சத்தீஸ்காரரில் நடைபெற்ற 20 தொகுதிகளான வாக்குப்பதிவில் மொத்தம் 70.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோன்று 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. மிசோரத்தில் 75.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Polling completed in Chhattisgarh and Mizoram