'உதயநிதி துணை முதல்வராக காத்திருக்கிறேன்' அமைச்சர் பொன்முடி.. எதிர்பார்ப்பு.!  - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர், தற்போதைய தமிழ்கா முதல்வர் ஸ்டாலினின் மகன் 'உதயநிதி' வெற்றிபெற்று எம்எல்ஏ.,வானார்.

அப்போதே அவர் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து நாளை (டிசம்பர் 14 ஆம் தேதி) அமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அதிர்க்கரபூர்வ அறிவிப்பில், நாளை (டிசம்பர் 14 ஆம்) தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பதற்கான கடிதம் நேற்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நாளை (டிசம்பர் 14) காலை 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் 400 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றது. 

இந்த நிலையில், இது குறித்து திமுக அமைச்சர் பொன்முடி பேசிய போது, "உதயநிதிக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சி அமைத்த போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஏனென்றால், கடந்த தேர்தலில் அந்த அளவிற்கு உதயநிதி உழைத்துள்ளார். இன்னும் அவர் பெரிய, பெரிய பொறுப்புகளை ஏற்று சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். அவர் துணை முதல்வராக பொறுப்பேற்பது எப்போது என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi about Uthayanithi Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->