#தமிழகம் || தமிழக அரசு முன்பே எச்சரித்தும் இன்று பறிபோன மூன்று சிறுவர்களின் உயிர்.! அழுது புரளும் கிராம மக்கள்.!
poosaripatti 3 children death
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை அடுத்த பூசாரிப்பட்டியில் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பாப்பான் குளத்தில் நான்கு சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இதில் மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/hdrhtrdj.png)
பூசாரிப்பட்டி அடுத்துள்ள காட்டுப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன்கள் மணி (16 வயது), முரளி (12 வயது) மற்றும் இவர்களின் நண்பன் அஸ்வின் உள்ளிட்ட 4 சிறுவர்கள் பாப்பான் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
இதில் மணி, முரளி, அஸ்வின் ஆகிய 3 பேரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். கரையில் இருந்த மற்றொரு சிறுவன் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கிய விவரத்தை கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக கிராமத்து மக்கள் மூழ்கிய சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/gesrherhj.png)
இதில் மணி, முரளி ஆகிய சிறுவர்களின் தந்தை செய்தியறிந்து மயக்கமடைந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நீர்நிலை பகுதிக்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கடமை என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
poosaripatti 3 children death