#BREAKING || உதவி கேட்ட சிறுமியிடம் அத்துமீறிய எடியூரப்பா.. போக்சோ வழக்கு பதிவு.!!
Posco case filed on former Karnataka cm yediyurappa
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடியூரப்பாவிடம் உதவி கேட்டு சென்றபோது தன்னிடம் தவறாத நடந்து கொண்டதாக அந்த சிறுமி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றபோது அவர் தன்னை அரைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்கு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் மீது சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் முக்கிய தலைவர் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்திருப்பது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Posco case filed on former Karnataka cm yediyurappa