"அவர் மேல ஏன் இவ்ளோ வன்மம்".! செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த பிரேமலதா.!! - Seithipunal
Seithipunal


சென்னை கோடம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்தித்த அவரிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் "விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். நீங்கள் யாரும் அவருடன் இருப்பதில்லை நான் மட்டுமே அவரிடம் இருந்து வருகிறேன். அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவ்வப்போது சொல்லி வருகிறேன்.

ஆனால் சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். தவறான தகவலை பரப்பும் முன்பு யாராக இருந்தாலும் எங்கள் தலைமை கழகத்தை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும். அதை விட்டுவிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். விஜயகாந்த் மீது அப்படி என்ன வன்மம் என்று எனக்கு புரியவில்லை. இதை நான் மன வருத்தத்துடன் கேட்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha ask why these kind of hates against Vijayakanth


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->