ஓட்டுக்கு காசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.!
Premalatha vijayakant speech about Erode by election vote for money
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் சிவகுமார் வெளியிட்டுருந்தார்.
அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே லஞ்ச ஊழல்வாதிகள் தான். மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறார்கள். அதேபோல் திராவிட மாடல் ஆட்சி என்று மு க ஸ்டாலின் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். அவர் நிறைவேற்றிய திட்டங்களில் பாதியை கூற சொல்லுங்கள். மேலும் வாக்குக்கு காசு கொடுத்தால் கட்டாயமாக வாங்கிக் கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Premalatha vijayakant speech about Erode by election vote for money