குடியரசு தலைவர் தேர்தலில் 87 பேரின் வேட்பு மனுக்களில் 79 மனுக்கள் நிராகரிப்பு.! யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு மனு என்ன ஆனது?!
Presidentelection2022 nomination list
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில், ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக, ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
திரௌபதி முர்முவுக்கு தமிழகத்தில் அதிமுக, பாமக, ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இவருக்கு தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றுவருகிறது. இதில்,
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், இருவரின் வேட்புமனுவும் சரியாக இருப்பதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது. மேலும், மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 87 வேட்பு மனுக்களில் 79 மனுக்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Presidentelection2022 nomination list