பிரதமர் மோடி-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு சமக்ர சிக்ஷா அபியான் என்ற திட்டத்தை தொடங்கியது.
சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா, ஆசிரியர் கல்வி திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையிலான இந்த திட்டத்தின் கீழ்  மத்திய அரசு மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கி வருகிறது.

இதற்கிடையே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு இதுவரை இந்த நிதியை வழங்கவில்லை என்றும்,  மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு நெருக்கடி அளிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

மேலும், சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும்,   ரெயில் திட்டப் பணிகள் விரைவாக நடைபெறுவதற்கு தற்போது மத்திய அரசு நிதி அவசரமாக தேவைப்படுவதாகவும்,  இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, நிதி வழங்க வலியுறுத்த இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.


அந்த வகையில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்திப்பதற்காக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி விரைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு  சந்தித்து கல்வி மற்றும் மெட்ரோ திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள்  விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister modi chief minister mk stalin will meet in person today


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->