பிரதமர் மோடி திராவிடர் தான்!...எச்.ராஜா பரபரப்பு விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த பாடலை தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் பாடிய நிலையில், நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கி, மூன்றாவது வரியான தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் என்ற வரியை தவிர்த்து 4-வது வரியில் இருந்து பாடுவதை தொடர்ந்தனர்.

இந்த நிகழ்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திராவிடம் என்பது இடத்தை குறிக்கும் என்றும், அது இனத்தை அல்ல என்று கூறினார்.

மேலும், தக்காண பீடபூமிக்கு தெற்கே காடுகள் நிறைந்த பகுதி இருந்ததாக  தெரிவித்த அவர், 2 பெரிய நிலப்பரப்புகள் இருந்ததும் என்றும்,  இதில் முதல் மாநிலமே குஜராத் என்பதால், நாட்டின் பிரதமரே திராவிடர் தான் என்று புதிய விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister modi is a dravidian h raja sensational explanation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->