திமுகவை அதிர வைத்துள்ள பிரதமர் மோடியின் பேச்சு..! 04 ஆண்டுகளுக்கு பின் நடந்த 'அட்டாக்' சம்பவம்..!
Prime Minister Modi speech has shaken the DMK
நேற்று முன்தினம் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் புதிய பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், அந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொள்ளவில்லை. பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றும் போது மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து பேசினார். அப்போது கேலியும் கிண்டலுமாக பேசிய வர, 'முதலில் தமிழில் கையெழுத்திடுங்கள், பின், மருத்துவப் பாடத்தை தமிழில் கொண்டு வாருங்கள்' என பேசினார்.
பிரதமர் மோடி, மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தி.மு.க., தரப்பு செயல்பாடுகள் எதற்கும் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த எந்த அரசு நிகழ்வாகவோ அல்லது வேறு நிகழ்வுகளில் தமிழக அரசை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதமர் மோடி விமர்சித்து பேசியதில்லை.
-k4jbn.png)
இந்நிலையில், பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும், ராஜ கண்ணப்பனும் கலந்துக்கொண்டனர். அவர்கள் இருவருமே நிகழ்ச்சி முடியும் வரை இறுக்கமாகவே காணப்பட்டனர்.
அதற்கு காரணம், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முதன்முறையாக அரசு நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க.,வை மறைமுகமாக விமர்சித்து பேசியது ஆகும்.
இந்த நிகழ்வில் பேசும் போது பிரதமர் கூறியதாவது; 'தமிழக ரயில்வே திட்டங்களுக்காக, முன்பு இருந்ததை காட்டிலும் துறை சார்பில் 07 மடங்கிற்கு கூடுதலாக நிதி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாண்டுகளில், ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது.' என்று குறிப்பிட்டார்.
-7rucu.png)
அத்துடன், 'நிதியை வாரிக் கொடுத்தாலும், சிலருக்கு காரணமே இன்றி அழும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் அழுதுகொண்டே இருக்கட்டும்; அவர்களால் அழத்தான் முடியும்' என கிண்டலாக கூறினார். அதற்கு மேடையில் இருந்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நெளிந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும், நிகழ்ச்சியில், தமிழக அரசின் மும்மொழி கொள்கை குறித்து மோடி பேசும் போது 'தமிழ் மொழி மீது பற்று இருப்பதால்தான், அதன் கலாசாரத்தை உலகளவில் கொண்டு போய் சேர்த்து உள்ளோம். 'தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் கடிதம் எழுதுகின்றனர். ஆனால், அது ஆங்கிலத்தில் தான் உள்ளது. 'கையெழுத்தும் ஆங்கிலத்திலேயே போடப்பட்டிருக்கிறது. 'அந்த தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போட்டு, கடிதம் அனுப்பக்கூடாதா?' என்று கிண்டலாக விமர்சித்தார்.
-f4y8j.png)
தற்போது, 'தி.மு.க., அரசு, 'நீட்' தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்து வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் பேசினார். அதாவது , ஏழை மாணவர்களுக்கும் மருத்துவ கல்வி கிடைக்கும் வகையில், தமிழில் பாடத்திட்டங்களை தி.மு.க., அரசு கொண்டு வரவேண்டும்' என கூறினார். பிரதமரின் இந்த அட்டாக் பேச்சு தி.மு.க., தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
English Summary
Prime Minister Modi speech has shaken the DMK