பிரதமர் மோடி வந்தவுடன் அதிரடியாக எடுத்த முடிவுகள் !! - Seithipunal
Seithipunal


தற்போது பாஜக தலைமையிலான புதிய அரசு அமைந்தவுடன், பாரத பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளார். பிரதமர் மோடி தற்போது அமைந்துள்ள புதிய அரசாங்கத்தின் தலைவராக பதவி ஏற்றவுடன், மோடி தனது முதல் முடிவை எடுத்து நாட்டு விவசாயிகள் நலனில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். 

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பாரத பிரதமரான பிறகு, விவசாயி நிதி விடுதலை அதிகாரப்பூர்வ கோப்பில் கையெழுத்திட்டார். "எங்கள் அரசு விவசாயிகளின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புள்ள அரசு" என்று பிரதமர் மோடி கூறினார். பொறுப்பேற்ற பின் கையெழுத்திடப்படும் முதல் கையெழுத்து, விவசாயிகளின் நலன் குறித்து இருப்பது பொருத்தமாக அமையும்.

பதவி ஏற்றவுடன் கிசான் நிதி யோஜனா திட்டம் கோப்பில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி, "இனி வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம்" என்றார். 

இந்த 18வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி நரேந்திர மோடி, பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிட ஒப்புதல் அளித்து தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் மற்றும் சுமார் 20,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister narendra modi signed in few schemes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->