திட்டமிட்ட சதி!!! அமித்ஷாவை பிரதமர் கட்டுப்படுத்த வேண்டும்..!!! இல்லையென்றால்...? - மம்தா பானர்ஜி
Prime Minister should control Amit Shah Mamata Banerjee
வக்பு திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதையடுத்து,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறை வெடித்தது.இந்த வன்முறையை தடுக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில் முர்ஷிபாத் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று முஸ்லிம் மதத் தலைவர்களுடன் மம்தா ஆலோசனை நடத்தியபோது அவர் தெரிவித்ததாவது,"கொடுமையான வக்பு (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்துகிறேன். இது நாட்டை பிளவுப்படுத்தும்.
தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.முர்ஷிதாபாத் கலவரத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து வந்த சக்திகளின் பங்கு இருப்பதாகக் எனக்கு செய்திகள் வந்துள்ளன. எல்லையைப் பாதுகாப்பது பாதுகாப்புப்படை வீரர்களின் பங்கு இல்லையா?. மாநில அரசு சர்வதேச எல்லையை பாதுகாப்பதில்லை.
மத்திய அரசு பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.வன்முறையின் எல்லைப் பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து வன்முறையின்போது கற்களை வீசுவதற்கு எல்லை பாதுகாப்புப்படை யாருக்கு நிதியளித்தது என்பதைக் கண்டுபிடிப்பேன்.
அமித் ஷாவை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். அவரது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்.அமித் ஷா ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்? அவர் ஒருபோதும் பிரதமராக மாட்டார்.
பிரதமர் மோடி வெளியேறிய பிறகு அவர் என்ன செய்வார்?. பிரதமர் தனது உள்துறை அமைச்சர் மத்திய நிறுவனங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அவரைக் கட்டுப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
English Summary
Prime Minister should control Amit Shah Mamata Banerjee