எம். பி.க்களுக்கு எல்லாமே ஃபிரீ தான்.. வாய் பிளக்க வைக்கும் சலுகைகள்..!! - Seithipunal
Seithipunal



சமீபத்தில் இந்தியாவில் உள்ள  543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கான நாடாளுமன்ற பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். வரும் ஜூன் 24, 25 தேதிகளில் எம். பி. க்கள் பதவி ஏற்க உள்ளனர்.

இந்நிலையில் மக்களவையில் எம். பி. க்களுக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் குறித்து இங்கு காண்போம். கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வின் படி, எம். பி. க்களுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. 

மேலும் சம்பளத்துடன் எம்.பி. க்கள் தங்கள் அலுவலகத்தை நடத்துவதற்கும், மக்களை தொடர்பு கொள்வதற்குமான செலவுகளுக்கு மாதாந்திர தொகுதி உதவித் தொகை ரூ. 70000 வழங்கப்படுகிறது. மேலும் அலுவலகப் பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளுக்கு தனியாக ரூ. 60000 பெறுகின்றனர். 

மேலும் நாடாளுமன்றத் கூட்டத் தொடர்களுக்காக டெல்லியில் தங்கும்போது தேவையான செலவுகளுக்காக தினமும் ரூ. 2000 ஒவ்வொரு எம். பி. க்களும் பெறுகின்றனர். மேலும் அதிவேக இணையம்  மற்றும் தொலைபேசி இணைப்பு, 50000 யூனிட் மின்சாரம், 4000 லிட்டர் தண்ணீர், 5 வருட பதவி காலத்தில் இலவச வீடு அல்லது வீட்டு கட்டணமாக மாதம் ரூ. 2 லட்சம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் எம். பி, க்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச மருத்துவ சேவை, முதல் வகுப்பில் ரயில் பயணம் , உள்நாட்டு விமான பயணம் இலவசமாக மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Privileges and Allowances Offered For LokSabha MPs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->