திருமண நாளை கொண்டாடிய பிரியங்கா காந்தி.! வெளியிட்ட புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி தம்பதியினரின் மகளான   பிரியங்கா காந்தி தன்னுடைய 26-வது திருமண நாளை  கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரியங்கா காந்தி அவரது நீண்ட நாள் நண்பரான ராபர்ட் வதெராவை 1997 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று தங்களது திருமண நாளை கொண்டாடிய இந்த ஜோடிகள் தங்களுடைய புகைப்படங்களை பரஸ்பரம் பகிர்ந்து சமூக வலைதளங்களின் வாயிலாக அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். 

இது தொடர்பான பதிவுகள் மக்கள் மத்தியில் வைரலாகி அவர்களும் இந்த ஜோடிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு 59 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் லைக் செய்து தங்கள் வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanka gandhi celebrate her 26th wedding anniversary with robert vadhera on intagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->