மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு குறித்து பிரியங்கா காந்தி கருத்து..!! - Seithipunal
Seithipunal



இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து நேற்று மக்களவை கூடியது. அப்போது மக்களவையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க் கட்சிகள் அனுமதி கோரினர்.

அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே எதிர்க் கட்சி எம். பி. க்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கூடிய அமர்வில், ராகுல் காந்திக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேசிய ராகுல் காந்தி, "தங்களை மட்டுமே இந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் பாஜகவினர் எப்போதும் வன்முறையையும், வெறுப்பையும் மட்டுமே பரப்புகின்றனர்" என்று கடுமையாக பேசினார். இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, வன்முறை மற்றும் மதம் இரண்டையும் இணைத்து பேசியதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவிக்கையில், "ராகுல் ஒருபோதும், இந்துக்களை அவமதிக்கும் விதத்தில் பேசவில்லை. அவர் தங்களை இந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் பாஜகவினரின் வெறுப்பரசியலை குறித்து தான் பேசினார். பாஜக மற்றும் அதன் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே மக்களிடம் அச்சம் மற்றும்  வெறுப்பை தான் பரப்புகின்றனர். பாஜக பரப்பும் வெறுப்பில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பாஜகவின் வன்முறை அரசியலை எண்ணி அச்சத்தில் தான் உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Gandhi Says About Rahul Gandhis Speech in Lok Sabha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->